Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
முன்னணி நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில், போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் திரில்லராக, அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ’கலியுகம்’.
ஆர்.கே இன்டர்நேஷனல் & பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தின் கதை எதிர்காலத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர்வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை இப்படம் சொல்கிறது.
முற்றிலும் புதுமையான களத்தில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வரும் மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதோடு, படத்தின் வெளியீட்டு தேதிக்கான போஸ்டரை பிரபல தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
Hindusthan Samachar / J. Sukumar