வழிபறியில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு ரவுடி கைது!
திருச்சி, 23 ஏப்ரல் (ஹி.ச.) திருச்சியில் முதியவர்கள் மற்றும் தனியாக செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், பொதுமக்களின் புகார்களின் பேரில் துரித நடவடிக்கை மேற்கொள்ளும் காவல்துறை, குற்றவாளிகளை உ
சரித்திர பதிவேடு ரவுடி கைது


திருச்சி, 23 ஏப்ரல் (ஹி.ச.)

திருச்சியில் முதியவர்கள் மற்றும் தனியாக செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், பொதுமக்களின் புகார்களின் பேரில் துரித நடவடிக்கை மேற்கொள்ளும் காவல்துறை, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தும் வருகிறது.

இந்த நிலையில், திருச்சி, கொட்டப்பட்டு, ஜே.ஜே நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் (வயது 51) என்பவர், ஆட்டோவில் பொன்மலை, சாய்பாபா கோவில் வழியாக சென்ற போது, அவரை வழிமறித்த மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ.1000-த்தை பறித்துச் சென்றால். இதனைத் தொடர்ந்து கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதேபோல், திருச்சி, மேல அம்பிகாபுரம், பெரியார் நகரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (வயது 51) அரியமக்கலம், கல்லான்குத்து ரயில்வே பாதை வழியாக வந்த போது, அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1000-த்தை பறித்துச் சென்றார். இது தொடர்பாக அஜீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த இரண்டு புகார்களின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பொன்மலை, முத்துமாரியம் கோவில் தெருவைச் சேர்ந்த 25 வயதுடைய சரித்திர பதிவேடு ரவுடி கார்த்திக், என்பவர் தான் இந்த குற்றங்களை செய்ததை கண்டுபிடித்தனர். மேலும், ரவுடி கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவரிடம் இருந்து ஒரு கத்தி, ரூ.500 பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / J. Sukumar