Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 23 ஏப்ரல் (ஹி.ச.)
உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பதிப்புரிமையின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுகிறது. இந்த நாளில், புத்தகங்களின் மூலம் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உள்ள தொடர்பை நினைவுபடுத்துகிறோம்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ‘உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை’-யின் கருப்பொருளாக “நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இலக்கியத்தின் பங்கு’ (The role of literature in achieving the Sustainable Development Goals) என்பதை ஐ.நா அறிவித்துள்ளது.
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு முக்கியமானதாக இருக்கும் வறுமை, பசி மற்றும் சமத்துவமின்மை போன்ற உலகளாவிய பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை இலக்கியம் எவ்வாறு செயலில் ஊக்குவிக்கும் என்பதை இந்த கருப்பொருள் டுத்துக்காட்டுகிறது.
இந்த தினத்தின் நோக்கம்:
புத்தகங்களைப் படிப்பதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பதிப்புரிமை குறித்த சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எழுத்தாளர்கள் மற்றும் புத்தகங்களுக்கு அஞ்சலி செலுத்துதல், புத்தகங்கள் மூலம் கலாச்சாரங்களுக்கு இடையிலான தொடர்பை நினைவுபடுத்துதல்.
கொண்டாடும் முறை:
புத்தகங்களை வாசித்தல், வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தல்.
புத்தகக் கடைகள், நூலகங்கள் மற்றும் புத்தகக் கண்காட்சிகளை ஊக்குவித்தல்.
புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
பதிப்புரிமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தல்.
Hindusthan Samachar / J. Sukumar