Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 24 ஏப்ரல் (ஹி.ச.)
1990 ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 24 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மூலம், ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் பங்களிப்புடன் டிஸ்கவரி விண்வெளி ஓடத்தினால் விண்ணில் ஏவப்பட்டது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி (Hubble Space Telescope)
மனிதகுலத்தின் விண்வெளி பற்றிய கற்பனையைத் தூண்டிய இந்த தொலைநோக்கிக்கு அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹபிள் என்பவரை நினைவுக்கூறுவதற்காக இந்த பெயர் வைக்கப்பட்டது.
இது விண்வெளியில் இருந்து பிரபஞ்சத்தை ஆராய்வதற்கும், அதில் உள்ள விண்மீன்கள், விண்மீன் திரள்கள் மற்றும் பிற வானியல் பொருட்களைப் படம் பிடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. 1940-களில் விண்வெளி தொலைநோக்கிகள் பற்றிய கருத்து முன்மொழியப்பட்டிருந்தாலும், 1970-களில் தான் ஹப்பிள் தொலைநோக்கிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
மிகநீண்ட காலமாக (35 ஆண்டுகளாக) வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் விண்வெளித் தொலைநோக்கியான ஹப்பிள், 2021 வரை தகவல்களை அளித்து, 1.5 மில்லியனுக்கும் அதிகமான படிமங்களை எடுத்தது. பிரபஞ்சத்தின் வயது (13.8 பில்லியன் ஆண்டுகள்) மற்றும் டார்க் எனர்ஜி பற்றிய ஆராய்ச்சிகளுக்கு உதவியது. ஆரம்பத்தில் முதிர் தெளிவின்மை (spherical aberration) இருந்தாலும், 1993ல் STS-61 பணியில் சரிசெய்யப்பட்டது.
ஆழ் விண்வெளியின் மிக விரிவான படம் (Hubble Deep Field), கருந்துளைகள், நெபுலாக்கள் மற்றும் விண்மீன் திரள்கள் பற்றிய விரிவான தரவுகள் மற்றும் விண்மீன்களின் வேகம் மற்றும் பிரபஞ்ச விரிவாக்கம் (ஹப்பிள் மாறிலி) கணக்கீடு ஆகிய பணிகள் இதன் சாதனைகளாகும்.
இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது, ஆனால் 31 ஆண்டுகள் செயல்பட்டது. பிறகு 2021 ஆம் ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி (JWST) ஏவப்பட்டது.
Hindusthan Samachar / J. Sukumar