பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி - இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம்
மும்பை , 24 ஏப்ரல் (ஹி.ச.) மகராஷ்டிரா மாநிலம், புனேவில் பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி நடைபெற்றது. இதன், 9 வது மற்றும் கடைசி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் கோனேரு ஹம்பி - பங்கேரியா நாட்டின் நுர்குல் சலிமோவா மோதினார்கள்.
இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்


மும்பை , 24 ஏப்ரல் (ஹி.ச.)

மகராஷ்டிரா மாநிலம், புனேவில் பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி நடைபெற்றது. இதன், 9 வது மற்றும் கடைசி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் கோனேரு ஹம்பி - பங்கேரியா நாட்டின் நுர்குல் சலிமோவா மோதினார்கள்.

வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கோனேரு ஹம்பி, 84 வது நகர்த்தலில் நுர்குல் சலிமோவாவை வீழ்த்தினார். இதன் மூலம் 7 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்த கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.

மற்ற இந்திய வீராங்கனைகளான வைஷாலி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் ஆகியோர் தங்களது போட்டிகளை டிரா செய்தனர்.

மேலும், ஒட்டுமொத்த போட்டியில் இந்திய வீராங்கிஅனை கோனேரு ஹம்பி முதலிடமும், சீனாவின் ஜூ ஜினெரும் 2 வது இடமும், மற்றொரு இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் 3 வது இடமும் பெற்றனர்.

Hindusthan Samachar / J. Sukumar