17 வயது சிறுமியை திருமணம் செய்த 33 வயது இளைஞர் மீது போக்சோ வழக்குப்பதிவு!
தூத்துக்குடி , 24 ஏப்ரல் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நடராஜபுரத்தைச் சேர்ந்த சண்முகையா என்பவரது மகன் செல்வகுமார். 33 வயதாகும் இவர் சுமை தூக்கும் வேலை செய்து வருகிறார். இவர், தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பெற்றோரி
17 வயது சிறுமியை திருமணம் செய்த 33 வயது இளைஞர் மீது போக்சோ


தூத்துக்குடி , 24 ஏப்ரல் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நடராஜபுரத்தைச் சேர்ந்த சண்முகையா என்பவரது மகன் செல்வகுமார். 33 வயதாகும் இவர் சுமை தூக்கும் வேலை செய்து வருகிறார். இவர், தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பெற்றோரின் அனுமதி இல்லாமல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

மேலும், நடராஜபுரம் பகுதியில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டில் அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். சிறுமி கருவுற்றதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, செல்வகுமாருக்கும், சிறுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், சிறுமி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிறுமியின் புகார் பேரில் விசாரித்த போலீசார், செல்வகுமார் மீது போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Hindusthan Samachar / J. Sukumar