Enter your Email Address to subscribe to our newsletters
ஸ்ரீநகர் , 25 ஏப்ரல் (ஹி.ச.)
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த்த பயங்கரவாத சம்பவத்தால், அம்மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற அனைவரும் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு விரைவாக திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் காஷ்மீரில் இருந்து சுமார் 10,090 சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து 10,090 பேர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீநகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 110 விமாங்கள் இயக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
அதே சமயம், காஷ்மீரில் தற்போது இருக்கும் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த பகுதிகளுக்கு செல்வதற்காக கூடுதல் விமானங்களை இயக்க உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, விமான டிக்கெட் விலையை உயரத்தக் கூடாது, என்றும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / J. Sukumar