Enter your Email Address to subscribe to our newsletters
டிஸ்பூர் , 25 ஏப்ரல் (ஹி.ச.)
ஜம்மு காஷ்மீ மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத்தளமான பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்குப் பிறகு பாகிஸ்தான் உடனான தூததரக உறவுகளில் இந்தியா பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டிருப்பதோடு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளையும் உடன அழைத்துக் கொண்டது.
மேலும், பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதோடு, வாகா எல்லையையும் மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளும் மத்திய அரசின் முடிவுக்கு, முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து அசாம் மாநிலத்தின் எதிர்கட்சியான ஏ.ஐ.யு.டி.எஃப் கட்சியின் எம்.எல்.ஏ அமினுல் இஸ்லாம் கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாங்கள் அவர் பேசும் வீடியோவை பார்த்தோம். தாக்குதலில் பாகிஸ்தான் உடந்தையை மறைத்து பாதுகாக்கும் வகையில் பேசியிருந்தார். பாகிஸ்தான் பயங்கவராதத்தை ஆதரித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யார் பேசினாலும் எனது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஏ.ஐ.யு.டி.எஃப் கட்சி தலைவர் பக்ரூதீன் அஜ்மல் இது குறித்து கூறுகையில், எம்.எல்.ஏ-வின் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை. பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை. அந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் மதத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார்கள், என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / J. Sukumar