Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 25 ஏப்ரல் (ஹி.ச.)
இயற்கையின் படைப்புகளில் பல அதிசயங்கள் இருந்தாலும், அவற்றில் மிக முக்கியமானது உயிரினங்கள். நமது பூமியில் பில்லியன் கணக்கான முதல் டிரில்லியன் கணக்கான பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த உயிரினங்கள் அனைத்தும் வெவ்வேறு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகை உயிரினங்களும் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.
அந்த வகையில், இயற்கையின் அருமையான படைப்புகளாக இருக்கும் பறவை இனம் தான் பெங்குவின்கள். பறவைகள் என்றாலும் இவற்றால் பறக்க முடியாது. அதே சமயம், நீந்துவதில் படு கில்லாடிகளான பெங்குவின்கள் மணிக்கு 15-20 கிமீ வேகம் நீந்துகின்றன.
அழிந்து வரும் இனங்களின் ஒன்றான பெங்குவினை காப்பதற்காகவும், அவற்றி வாழ்விடங்களை மேம்படுத்துவதற்காகவும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் தேதி சர்வதேச பெங்குவின்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அண்டார்க்டிகா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் வாழும் பெங்குவின்களில் 17 வகைகள் உள்ளன.
ஆண் பெங்குவின்கள் முட்டைகளை குளிரில் இருந்து பாதுகாக்க 2 மாதங்கள் வரை உணவின்றி உட்கார்த்திருக்கும்.
காலநிலை மாற்றம், மீன்பிடி மற்றும் கடல் மாசுபாடு போன்ற காரணங்களால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்த நாள் அவற்றின் வாழ்விடங்களை மேம்படுத்தவும், அவற்றை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நாளின் நோக்கம்:
பெங்குவின்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் வாழ்விடங்களை காப்பாற்றுதல்.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றி பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
கடல் சூழலை பாதுகாப்பதன் மூலம் பெங்குவின்களின் எதிர்காலத்தை உறுதி செய்தல்.
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து கடல் மாசுபாட்டைத் தடுப்பதன் மூலம் நாமும், இன்றைய பெங்குவின்கள் தினத்தில் பங்கேற்கலாம். மேலும், பெங்குவின்கள் பற்றிய விழிப்புணர்வை சமூக ஊடகங்களில் பரப்புவதோடு, முடிந்தவர்கள் பெங்குவின்கள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு நன்கொடையும் வழங்கி வருகிறார்கள்.
Hindusthan Samachar / J. Sukumar