Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 25 ஏப்ரல் (ஹி.ச.)
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் சி.எஸ்.கே அணி புள்ளி பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது.
எனவே, இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கே செல்லாது, என்று விளையாட்டு விமர்சகர்கள் கணித்துள்ள நிலையில், சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், எஞ்சியிருக்கும் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை, சேப்பக்கம் மைதானத்தில் நடைபெறும் 43 வது லீக் போட்டியில் சென்னையும், ஐதராபாத் அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டி குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், “அடுத்து வரும் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு சொல்வேம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் இருந்து வெல்வது எபதற்கான புளு பிரிண்டை ஆர்.சி.பி அணி கடந்த ஆண்டு அமைத்துக் கொடுத்துள்ளது. ஒருவேளை நாங்கள் தகுதி பெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்பதிலும் தெளிவாக இருக்கிறோம்.
கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம். பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறோம். எனவே, அடுத்து வரும் அத்தனைப் போட்டிகளையும் எங்களை சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / J. Sukumar