எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச) சென்னை அபிராமபுரம் பசுமை வழிச்சாலை பகுதியில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வசித்து வருகிறார்.. இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது.. அதில் எடப்பாடி பழனிச்சாமி வீடு ம
Edappadi palanisamy


சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை அபிராமபுரம் பசுமை வழிச்சாலை பகுதியில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வசித்து வருகிறார்..

இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது.. அதில் எடப்பாடி பழனிச்சாமி வீடு மற்றும் அவர் தலைமைச் செயலகம் செல்லும் வழியில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது..

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அபிராமபுரம் போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தீவிர சோதனை நடத்தினர்.

சுமார் ஒரு நேரமாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது..

இதனை அடுத்து அபிராமபுரம் போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Hindusthan Samachar / Raj