அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச) தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பிறகு முதல் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம
Edappadi palanisamy press meet


சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச)

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பிறகு முதல் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் அதிமுகவில் அமைப்பு ரீதியாக 82 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி குறித்தும், அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மே 15க்குள் பூத் கமிட்டி பணிகள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்படுகிறது.

பாஜக கூட்டணிக்குப் பின் அதிமுக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வியூகம், கட்டுப்பாடுகள் மற்றும் பொதுவெளியில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டவும், பூத் கமிட்டி அமைத்து போன்ற விசயங்களில் முக்கியத்துவம் தரவும் மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / Raj