Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி , 25 ஏப்ரல் (ஹி.ச.)
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், எல்லையில் பாதுகாப்பை அதிகரித்திருப்பதோடு, விமானப் படை விமானங்கள் மலை மற்றும் தரை இலக்குகளை தாக்குவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
’Exercise Aakraman’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சியில் ரஃபேல் போர் விமாங்கள் தலைமையில், போர் விமானக் கடற்படைகளை உள்ளடக்கிய பயிற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிநவீன தொழில்நுட்ப போர் விமானங்கள் தரைவழி தாக்குதல் மற்றும் மின்னணு போர் பயிற்சிகளை உள்ளடக்கிய சிக்கலான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், இந்திய விமானப்படையின் தளவாடங்கள் கிழக்கு பகுதி உட்பட பல விமான தளங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்லதாகவும், பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.
சிறந்த இந்திய விமானப்படை வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த பயிற்சியில், தொலைதூர இலக்குகளை துல்லியமாக குண்டுவீசி தாக்க கூடிய பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இது இந்தியாவை போருக்கு தயாராக இருப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.
விமானப்படை உயர் அதிகாரிகளால் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதோடு, இதுபோன்ற பயிற்சிகள் வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Hindusthan Samachar / J. Sukumar