Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத்தந்த
உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்அவர்கள் அறிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டப்போராட்டம் நடத்தியதன் விளைவாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்கள் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்திருந்தது சட்ட விரோதமானது.
அந்த சட்ட மசோதாக்கள் ஆளுநர் அவர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும், எனும் உச்சநீதிமன்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுத் தந்ததன் காரணமாக 10 மசோதாக்கள் அமலுக்கு வந்தது,
அவை:
தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,
சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,
பெரியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,
அண்ணா பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,
தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்தi மசோதா,
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,
தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,
தமிழ்நாடு தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா ஆகும்.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெறுவதற்கு வழக்காடிய தலைச்சிறந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோஹத்கி, டாக்டர்.அபிஷேக் சிங்வி, M.P., ராகேஷ் திவேதி, .P.வில்சன், M.P., ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பாராட்டுவிழா 27.04.2025 மாலை 5 மணிக்கு சென்னை, கிண்டி, ஐ.டி.சி கிராண்ட் சோழாவில் நடைபெறுகிறது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், ஓய்வுபெற்ற நீதியரசர்கள், அறிஞர் பெருமக்கள், மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக ஆசிரியர்கள், ஆன்றோர்கள் - சான்றோர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர் என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் எக்ஸ் வலைதளம் வாயிலாக தெரிவித்தார்கள்.
Hindusthan Samachar / Raj