மருத்துவத்துறையில் புதிய தொழில்நுட்பம்! - AI மூலம் வடிவமைக்கப்பட்ட O-Arm சாதனம் சென்னையில் அறிமுகம்
சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.) அறிவியல்த்துறையின் வளர்ச்சி மருத்துவத்துறையிலும் பிரதிபலித்து வருவதால், பல அதிநவீன தொழில்நுட்பங்கள் மருத்துவத்துறையில் அறிமுகமாகி, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறது. அந்த வகையில், மிக கடினமான மற்ற
மருத்துவத்துறையில் புதிய தொழில்நுட்பம்


சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)

அறிவியல்த்துறையின் வளர்ச்சி மருத்துவத்துறையிலும் பிரதிபலித்து வருவதால், பல அதிநவீன தொழில்நுட்பங்கள் மருத்துவத்துறையில் அறிமுகமாகி, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறது. அந்த வகையில், மிக கடினமான மற்றும் ஆபத்தான அறுவை சிகிச்சைகளான மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சைகளை துல்லியமாகவும், பாதுகாப்பாகவும், விரைவிவாகம் மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனம் சென்னையில் முதல் முறையாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை அறிமுகம் செய்திருக்கிறது.

செயற்கை நுண்ணறிவால் மேற்கொள்ளப்படும் 2D மற்றும் 3D இமேஜிங் வழியாக இயங்கும் O-Arm சாதனம், மிக அதிக துல்லியத்துடனும், பாதுகாப்புடனும் அதிக சிக்கலான மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சை செயல்முறைகளை திறம்பட மேற்கொள்ள அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சையின்போது நிகழ்நேர இமேஜிங் (படங்கள்) -ஐ இது வழங்கி துல்லியமான முடிவு எடுப்பதற்கும் சிறப்பான திசையமைவுக்கும் உதவுகிறது. செயற்கை சாதனங்களை சரியாக பொருத்துவதை உறுதி செய்யும் திறனையும் மற்றும் உடனடியாக முதுகுத்தண்டு ஒத்திசைவையும் இது உறுதி செய்யும். இதில் அமைந்துள்ள மிக நவீன மொபைல் இமேஜிங் செயல்தளமானது, அறுவைசிகிச்சையின்போது 360 டிகிரி சிடி போன்ற தோற்றப்படங்களை வழங்குகிறது. அறுவைசிகிச்சை செய்யும் உடற்பகுதியின் மீது முழுமையான தோற்றக்காட்சியை அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு இது வழங்குவதால் நிகழ்நேரத்தில் தகவலறிந்த நிலையில் முடிவுகளை எடுக்கும் அவர்களின் திறனை மேம்படுத்துகிறது. உடலுக்கான ஒரு ஜிபிஎஸ் போன்ற கருவியான ஸ்டெல்த்ஸ்டேஷன் நேவிகேஷன் என்பதுடன் இச்சாதனம் நேர்த்தியாக ஒருங்கிணைகிறது; மிக நுட்பமான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சையின்போது ஸ்குரூக்கள் மற்றும் செயற்கை இம்பிளாண்ட்கள் மிகத் துல்லியமாக பொருத்தப்படுவதை இச்சாதனம் உறுதி செய்கிறது.

இந்த O-Arm சாதனம் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், இஸ்ரோவின் தலைவர் டாக்டர்.வி.நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சென்னை, காவேரி மருத்துவமனையின் மூளை & முதுகுத்தண்டிற்கான அறுவைசிகிச்சை தலைமை நிபுணரும், நரம்பு அறிவியல் துறையின் இயக்குநருமான டாக்டர். ரங்கநாதன் ஜோதி, O ARM சாதனம் குறித்து பேசுகையில்,

மூளை-நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்களான நாங்கள், மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் அடிக்கடி அறுவைசிகிச்சைகளை மேற்கொள்கிறோம்; இதில் துல்லியம் என்பது வெறுமனே முக்கியமானது மட்டுமல்ல; துல்லியம்தான் அனைத்துமே. நாங்கள் அறுவைசிகிச்சை செய்யும்போது உடல் அமைப்பை மிகத்தெளிவாகவும், விரிவாகவும் காண்பதற்கு O ARM எங்களுக்கு உதவுகிறது. சிகிச்சையின் விளைவில் கணிசமான மாற்றத்தை இது செய்கிறது. கையில் ஒரு 3D படத்தை வைத்துக் கொண்டு அறுவைசிகிச்சையை செய்வது போன்றது இது. சிக்கலான முதுகுத்தண்டு ஊனத்தை சரிசெய்தல், புற்றுக்கட்டிகளை வெட்டி அகற்றுதல் மற்றும் மிக குறைவான ஊடுருவலுள்ள செயல்முறைகள் ஆகியவற்றை இந்த O-ARM சாதனத்தின் மூலம் அதிக துல்லியத்தோடும், நம்பிக்கையுடனும் இப்போது செய்ய முடியும். இது வெறுமனே ஒரு தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல; எமது நோயாளிகளுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் கவசம் என்றே இதைக் கூறலாம். சென்னையில் மூளை நரம்பியல் அறுவைசிகிச்சையில் ஒரு மாபெரும் பாய்ச்சலை இது குறிக்கிறது” என்றார்.

காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் புதிய தொழில்நுட்பம் குறித்து கூறுகையில்,

நோயாளிகளின் பாதுகாப்பே எமது முதன்மையான முன்னுரிமையாக எப்போதும் இருந்து வருகிறது. நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இந்த பொறுப்புறுதியே அடிப்படை காரணமாக இருக்கிறது. சென்னையில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் O-ARM அறுவைசிகிச்சை சாதனத்தின் மூலம், நோயாளியின் நலனை முதலிடத்தில் வைக்கும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அறுவைசிகிச்சையின் துல்லியத்தை இச்சாதனம் மேம்படுத்துகிறது, இடர்வாய்ப்புகளை குறைக்கிறது மற்றும் அறுவைசிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும் காலஅளவை கணிசமாக மேம்படுத்துகிறது. சென்னையில் ஸ்டெல்த் நேவிகேஷன் உடன் கூடிய O-ARM சாதனத்தை அறிமுகம் செய்திருப்பதன் வழியாக இன்றைய காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய அதிக பாதுகாப்பான, அதி நவீன சிகிச்சை பராமரிப்பு எமது நோயாளிகள் பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். உலகத்தரம் வாய்ந்த புத்தாக்கத்துடன் கனிவான சிகிச்சையையும், ஒருங்கிணைத்து வழங்கும் எமது இலட்சியத்தையும், குறிக்கோளையும் இச்சாதனத்தின் அறிமுகம் வலுவாக எடுத்துக் கூறுகிறது.” என்றார்.

Hindusthan Samachar / J. Sukumar