என்.எல்.சி தொழிலாளர் சங்க அங்கீகாரத் தேர்தல் - திமுக, அதிமுக தொழிற்சங்கள் அங்கீகாரம் பெற்றது
நெய்வேலி , 26 ஏப்ரல் (ஹி.ச.) நெய்வேலி நிலக்கரி சுரங்க கழக தொழிலாளர் சங்க அங்கீகாரத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக, அதிமுக, பாட்டாளி சங்கம், பி.எம்.எஸ், சி.ஐ.டி.யு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தொழில் சங்கங்கள் போட்டியிட்ட நி
திமுக, அதிமுக தொழிற்சங்கள் அங்கீகாரம் பெற்றது


நெய்வேலி , 26 ஏப்ரல் (ஹி.ச.)

நெய்வேலி நிலக்கரி சுரங்க கழக தொழிலாளர் சங்க அங்கீகாரத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக, அதிமுக, பாட்டாளி சங்கம், பி.எம்.எஸ், சி.ஐ.டி.யு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தொழில் சங்கங்கள் போட்டியிட்ட நிலையில், திமுக மற்றும் அண்ணா திமுக தொழிற்சங்கள் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளன.

நெய்வேலி நிலக்கரி சுரங்க கழக தொழிலாளர் சங்க தேர்தல் விதிப்படி 51 சதவீத ஓட்டு வாங்கும் சங்கம் மட்டுமே அங்கீகாரம் பெறும். எந்த ஒரு அமைப்பும் 51 சதவீதம் வாக்கு பெறவில்லை என்றால், இணையாக 51 சதவீதம் பெறும் சங்கங்களுக்கு அங்கீகாரம் கிடிஅக்கும்.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. தொழிற்சங்கமும், தி.மு.க. தொழிற்சங்கமும் சேர்ந்து 51 சதவீத வாக்குகளை பெற்றதால், இரு சங்கங்களும் அங்கீகாரம் பெற்றன.

இனி பேச்சுவார்த்தைக்கு அங்கீகாரம் பெற்ற இந்த இரு அமைப்புகளை மட்டுமே என்.எல்.சி. நிர்வாகம் அழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கங்கள் பெற்ற வாக்கு விவரம்:

தி.மு.க : 2,507

அ.தி.மு.க : 1,389

பாட்டாளி சங்கம் : 1,385

சி.ஐ.டி.யு : 794

டி.டி.யு.எச் : 270

பி.எம்.எஸ் : 101

Hindusthan Samachar / J. Sukumar