Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 27 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்தவர்கள் எல்லாம் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும் அந்த பட்டியலில் இணைந்து விட்டார்.
நடிகை கஸ்தூரி சந்தானத்திற்கு அம்மாவாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பிரேம் ஆனந்த் மற்றும் சந்தானம் கூட்டணியில் உருவாகும் அடுத்தப் படத்திற்கு ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குநர்கள் கெளதம் மேனன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சந்தானத்திற்கு அம்மாவாக நடிகை கஸ்தூரி நடித்திருக்கிறார்.
நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar