Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள குருவாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி பாண்டியன்.
கடந்த 20 ஆண்டுகளாக கிணற்றுப் பாசனத்தை கொண்டு புல் இனத்தைச் சேர்ந்த வெட்டி வேரை பயிரிட்டு அதன் மூலம் கூடைகள், தலையணை, வாசனை திரவியங்கள், தைலங்கள், மாலைகள்,அழகு சாதன பொருட்கள் என 100க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை தயாரித்து அதனை சந்தைப்படுத்தி அதன் மூலம் லட்சக்கணக்கில் லாபமிட்டுவருதோடு மட்டுமல்லாமல் தங்கள் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் இதர பெண்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்து அவர்கள் வாழ்க்கையிலும் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் பாண்டியன் கடந்த ஆண்டு வானம் பார்த்த வறண்ட பூமியான இப்பகுதியில் புது முயற்சியாக பருவ காலங்களில் கிடைக்கப்படும் மழை நீரை மட்டுமே பயன்படுத்தி ஏக்கர் கணக்கில் வெட்டிவேரை பயிரிட்டு தற்சமயம் அதில் மகத்தான வெற்றியும் கண்டுள்ளார்.
மாநில அளவில் இதுவரை வேறு யாரும் செய்யாத இவரின் இத்தகைய பெரு முயற்சியினை வேளாண் விஞ்ஞானிகள், மாவட்டதோட்டக்கலை அதிகாரிகள், விவசாயிகள் பொறியாளர்கள், தொழில் முனைவோர் என பலதரப்பட்டோர் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து அனைவரும் நேரில் வந்து பாராட்டியதோடு அவர் மேற்கொள்ளும் மானாவாரி விவசாய முறையின் விதங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த வெட்டிவேர் சம்பந்தமான அனைத்து பொருட்களையும் ஆர்வமோடு பார்த்து வாங்கி சென்றனர்.
Hindusthan Samachar / Durai.J