Enter your Email Address to subscribe to our newsletters
ஸ்ரீநகர் , 29 ஏப்ரல் (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, மீண்டும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம், என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள 87 சுற்றுலாத் தளங்களில் 48 சுற்றுலாத் தளங்களை காஷ்மீர் அரசு மூடியுள்ளது.
பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் அல்லாத நபர்கள் மீது குறிவைத்து தக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் தீவிரமாக திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியிருப்பதோடு, பாகிஸ்தானின் உலவு அமைப்பான இண்டர்-சர்வீஸ் இண்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) காஷ்மீர் பண்டிட்டுகள், உள்ளூர் அல்லாத நபர்கள் மற்றும் ஸ்ரீநகர், கந்தர்பால் மாவட்டங்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட வாய்ப்பு இருப்பதாக, இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதிகளின் வீடுகளை அழித்ததற்கு பதிலடியாக ஒரு மிகப்பெரிய, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் தாக்குதலை இலக்காக வைத்து பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும், ரயில்வே உள்கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தவும், பள்ளத்தாக்கில் உள்ளூர் அல்லாத ரயில்வே ஊழியர்களின் குறிப்பிடத்தக்க இருப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்வேயை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்ஆன வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள உளவுத்துறை, ரயில்வே பாதுகாப்புப் பணியாளர்கள் தங்களுடைய நியமிக்கப்பட்ட முகாம்கள் மற்றும் முகாம்களுக்கு வெளியே செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
பயங்கரவாதிகளின் இத்தகைய தாக்குதல்களை முறியடிப்பதற்காக காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதோடு, குல்மாக்ர், சோனாமார்க் மற்றும் தால் ஏரி உள்ளிட்ட முக்கியமான சுற்றுலா பகுதிகளில் ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் ‘ஃபிதாயீன்’ எதிர்ப்புப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / J. Sukumar