Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 29 ஏப்ரல்
(ஹி.ச.)
தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட இந்து எழுச்சி, முதல்வர் மு.க.ஸ்டாலினை பணியவைத்துள்ளது, என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சைவமும், வைணவமும் தமிழ்நாட்டின் இருபெரும் அடையாளங்கள். பன்னிரு திருமுறைகளும், நாலாயிர திவ்யபிரபந்தமும் இல்லாமல் தமிழ் இல்லை. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இல்லாமல் தமிழர்கள் இல்லை. தமிழர்களின் இருபெரும் சமயங்களின் புனித குறியீடுகளை கொச்சைப்படுத்தி, ஆபாசமாக பொது மேடையில் பேசிய பொன்முடி பேசிய அருவெறுக்கத்தக்க ஆபாச பேச்சுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளித்த பின், சென்னை உயர் நீதிமன்றம் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட பின், வேறு வழியின்றி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
முன்பு இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் கொச்சைப்படுத்தி பேசுவது அதிக மக்களை சென்றடையாமல் இருந்தது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பொன்முடி போன்றவர்களின் ஆபாச முகம் அனைவரிடமும் சென்று சேர்ந்து, அவர்களது இந்து மத வெறுப்பை மக்களிடம் அம்பலப்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட ‘இந்து எழுச்சி’, முதல்வர் ஸ்டாலினை பணிய வைத்திருக்கிறது.
இந்த எழுச்சி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தும். இது தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றம். இனி யார் மீதும், யாரும் வெறுப்பை உமிழ்ந்து விட்டு தப்பி விட முடியாது, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / B. JANAKIRAM