சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வில், அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக விடுமுறை கால நீதிபதிகள் அறிவிப்பு
சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.) கோடை விடுமுறையொட்டி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வில், அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக விடுமுறை கால நீதிபதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் மே1 ம் தேதி முதல் ஜூன் 1 ம் தேதி கோடை வ
Chennai High court order


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)

கோடை விடுமுறையொட்டி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வில், அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக விடுமுறை கால நீதிபதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் மே1 ம் தேதி முதல் ஜூன் 1 ம் தேதி கோடை விடுமுறை காலத்தில் நீதிபதிகள் மாலா, நீதிபதி அருள் முருகன், விக்டோரியா கவுரி ஆகியோர் மே 7 மற்றும் 8ம் தேதிகளில் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.

இதே போல நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் மே 14,15, 21,22 ஆகிய தேதிகளிலும், நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, சத்தியநாராயண பிரசாத், நீதிபதி திலகவதி, நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் மே 28, 29 ம் தேதிகளிலும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர். சக்திவேல், பி.பி. பாலாஜி, எம்.ஜோதிராமன், பி. வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன், கே.ராஜசேகர், ஸ்ரீமதி , விஜயகுமார், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமிம் அஹமது, பூர்ணிமா ஆகியோர் விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்

Hindusthan Samachar / Raj