Enter your Email Address to subscribe to our newsletters
இராமநாதபுரம், 29 ஏப்ரல் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலய சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 12.05. 2025 ஒருநாள் பரமக்குடி வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்
செய்தி குறிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது,
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் சித்திரை கோடை திருவிழா முக்கிய நிகழ்வாக கள்ளழகர் குதிரை வாகனத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நிகழ்வானது 11.05.2025 அன்று இரவு முதல் தொடங்கி மறுநாள் 12.05.2025 அன்று அதிகாலை வரை நடைபெறுவதை முன்னிட்டு 12.05.2025 அன்று திங்கள் கிழமை ஒருநாள் மட்டும் பரமக்குடி வட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 24.05.2025 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
மேலும் பரமக்குடி வட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும்
24.05.2025 அன்று வழக்கம்போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 12.05.2025 திங்கள்கிழமை அன்று பரமக்குடி வட்டத்தில் உள்ள சார்நிலை கருவூலகம் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / Raj