Enter your Email Address to subscribe to our newsletters
புபனேஸ்வர் , 29 ஏப்ரல் (ஹி.ச.)
ஒடிசா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் வெப்பத்தில் தவித்த மக்கள் சற்று ஆறுதல் அடைந்தாலும், மாநிலம் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து பெரும் அழிவை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஒடிசாவின் 30 மாவட்டங்களில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் இடி, மின்னல், ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றால், நெல் போன்ற பயிர்கள் சேதமாகியுள்ளது. கியோஞ்சர், மயூர்பஞ்ச், பத்ரக் மற்றும் பாலசோர் ஆகிய இடங்களில் உள்ள கட்சா வீடுகள் மற்றும் குடிசைகளுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மயூர்பஞ்ச், கியோஞ்சர், அங்குல், தேன்கனல், பௌத், கந்தமால், ராயகடா, கோராபுட் மற்றும் மல்கங்கிரி உள்ளிட்ட பெரும்பாலான கடலோரப் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. மயூர்பஞ்ச், பாலசோர், கியோஞ்சர், பத்ரக் மற்றும் ஜாஜ்பூர் ஆகிய பகுதிகளுக்கு அதிகாரிகள் 'ஆரஞ்சு' எச்சரிக்கையை விடுத்துள்ளனர், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 29 மற்றும் ஏப்ரல் 30 ஆகிய தேதிகளில் ஒடிசாவில் தனித்த ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்றும், ஏப்ரல் 29 முதல் மே 1 வரை கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் வீசும் மற்றும் 45-50 கிமீ வேகத்தில் காற்று வீசும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar