Enter your Email Address to subscribe to our newsletters
திண்டுக்கல், 29 ஏப்ரல் (ஹி.ச.)
கோடை காலம் துவங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகளவில் இளநீர், சர்பத், பழச்சாறு, குளிர்பானம் போன்றவைகளை விரும்பி குடிக்க துவங்கியுள்ளனர்.
அதற்கு அத்தியாவசிய தேவையாக எலுமிச்சை பழம் உள்ளது. இதனால் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான வடகாடு, பால்கடை, கண்ணணூர், புலிக்குத்திக்காடு, பெத்தேல்புரம், சிறுவாட்டுக்காடு, ஆடலூர், பன்றிமலை, பாச்சலூர், கே.சி.பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை நடவு செய்துள்ளனர். தற்போது எலுமிச்சை அறுவடை நடைபெற்று வருகிறது.
வரத்து அதிகரிப்பால், கடந்த மாதம் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.50 முதல் ரூ.70 வரை ஒட்டன்சத்திரம் எலுமிச்சை மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போது வரத்து குறைவாலும், பயன்பாடு அதிகரிப்பாலும் தற்போது ஒரு கிலோ ரூ.120ல் இருந்து ரூ.150 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b