கற்பழித்து கொலை செய்யப்பட்ட மருத்துவரின் செல்போன் எண் பயன்படுத்தப்படுவதாக குடும்பத்தார் புகார்!
கொல்கத்தா 29 ஏப்ரல் (ஹி.ச.) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி, கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அரங்கில் பயிற்சி மருத்துவர் அரை நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டார். நாடு முழுவதும் மிகப்பெரும் பரபரப்பை ஏ
மருத்துவரின் தொலைபேசி எண் பயன்படுத்தப்படுவதாக குடும்பத்தார் புகார்


கொல்கத்தா 29 ஏப்ரல் (ஹி.ச.)

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி, கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அரங்கில் பயிற்சி மருத்துவர் அரை நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

நாடு முழுவதும் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படு்த்திய இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், ஜனவரி 20 ஆம் தேதி கொல்கத்தா நீதிமன்றம் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட மருத்துவரின் செல்போன் எண், வாட்ஸ்-அப் குழு ஒன்றில் இருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளது. இதனால், தங்களது மகள் இறந்த பிறகு அவளது செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு வருவதாக மருத்துவரின் குடும்பத்தார் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தொடங்கிய உடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் கொல்கத்தா காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய குடும்பத்தார், பிறகு வழக்கு சிபிஐ வசம் சென்றவுடன், அவர்களிடம் செல்பொன் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும், தங்களது மகளின் மரணத்தின் ரகசியம் அந்த செல்போனில் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அவள் இறந்து சில மாதங்களுக்குப் பிறகு என் மகளின் எண் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இருந்து வெளியேறியதை திடீரென்று அறிந்தோம். இறந்தவர் எப்படி குழுவில் இருந்து வெளியேற முடியும்? என்று குடும்பத்தார் நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டுக்கு சிபிஐ எந்தவித விளக்கும் அளிக்கப்படவில்லை. அதே சமயம், சைபர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இது குறித்து கருத்து கூறுகையில், எந்த ஒரு வாட்ஸ் அப் கணக்கையும் 120 நாட்களுக்கு பயன்படுத்தவில்லை என்றால் அது தானாகவே நீக்கப்பட்டு விடும், என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குடும்பத்தாரின் கோரிக்கையை கேட்ட நீதிபதி, அவர்களின் புகார்களுக்கான அடுத்த நிலை அறிக்கையை ஜூன் மாதம் 10 ஆம் தேதி சமர்க்குமாறும் சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / J. Sukumar