Enter your Email Address to subscribe to our newsletters
ஸ்ரீநகர் , 29 ஏப்ரல் (ஹி.ச.)
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்பு காஷ்மீரில் நடத்திய பயஙரவாத தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொள்ளப்பட்ட சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ள நிலையில், 5 வது நாளாக தனது அத்துமீறலை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எல்லையில் அத்துமீறி தாக்குதலை நடத்த தொடங்கிய பாகிஸ்தான் ராணுவம், நேற்று இரவு 5 வது நாளாக தாக்குதலை தொடர்ந்துள்ளது. குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்கு எதிரே உள்ள பகுதிகளை குறிவைத்து, எல்லைக் கட்டுப்பாடு கோடு முழுவதும் பாக்கிஸ்தான் இராணுவ நிலைகள் சிறிய வகை ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே போற் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், பயங்கரவாதிகளின் பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்திய பாதுகாப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar