Enter your Email Address to subscribe to our newsletters
இடுக்கி, 29 ஏப்ரல்
(ஹி.ச.)
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்தவர் சன்னிஸ்கரியா (வயது 53). கூலித்தொழிலாளியான இவர், 7-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இது குறித்து கஞ்சிக்குழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Hindusthan Samachar / B. JANAKIRAM