கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு
திருவள்ளூர், 29 ஏப்ரல் (ஹி.ச.) ஆந்திரா மாநிலத்தில் இருந்து செங்குன்றம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்குன்றம் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவி
கஞ்சா கடத்தல் - இளைஞர் மீது வழக்கு


திருவள்ளூர், 29 ஏப்ரல்

(ஹி.ச.)

ஆந்திரா மாநிலத்தில் இருந்து செங்குன்றம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்குன்றம் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்ற வாலிபரிடம் சோதனை செய்தனர். அவர் பையில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழைய ஆழ்குடி முதலியார் தெருவைச் சேர்ந்த காளீஸ்வரன் என தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Hindusthan Samachar / B. JANAKIRAM