Enter your Email Address to subscribe to our newsletters
புதுச்சேரி, 3 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரி வழுதாவர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் ஒன்று வந்தது,அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அடுத்து வரும் ஒரு மணி நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஊழியர்கள் உடனடியாக அருகில் உள்ள கோரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்,
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கோரிமேடு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூன்று மாடிகளிலும் சோதனை செய்தனர்.
அதேபோன்று மாவட்ட ஆட்சியர் கார் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பார்க்கிங் உள்ளிட்ட வளாகம் முழுவதும் போலீசார் சோதனை இட்டனர்.
சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற வெடிகுண்டு சோதனையில் எந்த ஒரு பொருளும் சிக்கவில்லை, மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்றும் தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு சோதனையின் போது வெளியிலிருந்து பொதுமக்கள் யாரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் நுழைவாயில் பூட்டப்பட்டது.
போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் நடத்திய சோதனையால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / Durai.J