Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 3 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் நேற்று (ஏப்ரல் 2) துவங்கியது.
வரும் 6-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சி.பி.எம் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் உட்பட நாடு முழுவதுமிருந்து கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மதுரை வந்துள்ளனர்.
இன்று(ஏப்ரல் 3) நடைபெறும் மாநாட்டுக்கு மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் மாநாட்டு உரை நிகழ்த்துகிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப்ரல் 3) சி.பி.எம் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்வர் மதுரை செல்லவுள்ளார்.
சி.பி.எம். அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை தருவதால் பாதுகாப்பு கருதி அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b