Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 3 ஏப்ரல் (ஹி.ச)
தமிழகத்தில் மின்சாரம் தொடர்பான புகார்களுக்கும் தீர்வு காணும் வகையில், வரும் ஏப்ரல் 5-ம் தேதி ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெறும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 5-ம் தேதியன்று காலை 11 மணிமுதல் மாலை 5 மணிவரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிலும் ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அன்றைய தினம் பெறப்படும் அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களின் மீதும் உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்.
எனவே, மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.
Hindusthan Samachar / vidya.b