தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 3 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை, 3 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் கூறி உள்ளதாவது,

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை,தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

இன்று (ஏப்.3) தினம் நீலகிரி,கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை,தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை (ஏப்.4)நீலகிரி,கோவை,திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி,திண்டுக்கல், மதுரை,விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை என 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஏப்.5ம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நீலகிரி,கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல்,மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Hindusthan Samachar / vidya.b