ஆர் எஸ் எம் ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சாலை மறியல்
புதுச்சேரி, 3 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி மாநிலம் முழுவதும் தேசிய சுகாதார ஊழியர்கள் சுகாதாரத் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர் மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறையில் 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடம் இருக்கும் நிலையில் தேசிய சுகாதார ஊ
Puducherry


புதுச்சேரி, 3 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி மாநிலம் முழுவதும் தேசிய சுகாதார ஊழியர்கள் சுகாதாரத் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர் மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறையில் 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடம் இருக்கும் நிலையில் தேசிய சுகாதார ஊழியர்களை கொண்டு அந்த காலி பணியிடங்களை ஈடு செய்து வருகின்றனர் இந்நிலையில் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக தேசிய சுகாதார ஊழியர்கள் பணி செய்து வருவதால் சமமான ஊதியம் வழங்க வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி மாநிலம் முழுவதும் என் ஆர் எச் எம் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேசிய சுகாதார ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊழியர்கள் இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகும் நிலையை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் திருநள்ளாற்றில் இந்திய கூட்டணி சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / Durai.J