Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 3 ஏப்ரல் (ஹி.ச.)
வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே, லோக்சபாவில் நேற்று(ஏப்ரல் 2) தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பின் நள்ளிரவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.
இந்நிலையில் இன்று
(ஏப்ரல் 3) மாநிலங்களவை கேள்வி நேரம் முடிந்ததும், வக்ப் திருத்த சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார்.
ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது:
இன்றைய நிலவரப்படி, 8.72 லட்சம் வக்ப் சொத்துக்கள் உள்ளன. வக்ப் திருத்த மசோதா 2025ஐ ஆதரிக்குமாறு காங்கிரஸ் கட்சியையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மசோதா மீதான விவாதம் தற்போது வருகிறது. விவாதத்திற்கு பிறகு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறினால், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின், விரைவில் இது சட்டமாக அமலுக்கு வரும்.
Hindusthan Samachar / vidya.b