Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 20 மே
(ஹி.ச.)
டாடா எலக்ட்ரானிக்ஸ் தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் அமைந்திருக்கும் அதன் ஐபோன் உற்பத்தி ஆலைத் திறனை விரிவுப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவை முக்கியமான உற்பத்திக் கூடமாக கருதும் ஆப்பிள் நிறுவனம் இந்த முயற்சியின் மூலமாக இரண்டாம் கட்ட மேம்பாட்டு வேலைகளில் கவனம் செலுத்தியுள்ளது.
“ஏற்கனவே இருக்கக்கூடிய 50,000 கூடங்களை இரட்டிப்பாக்குவதற்கு டாட்டா எலக்ட்ரானிக்ஸ் முடிவு செய்துள்ளது” என்று ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் நடக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர பிராடக்ட் அறிமுகப்படுத்தும் விழாவில் இந்த விரிவாக்கம் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒரு தீ விபத்து காரணமாக ஓசூரில் விரிவாக்க செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதற்கு முன்பு ஓசூர் ஆலையின் திறன் 50,000 கூடங்களை அடைந்திருந்தது. தீ விபத்திற்கு பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சற்று நேரம் எடுத்ததாக கூறப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய விநியோக சங்கிலியில் இந்தியா முக்கியப் பங்கு கொண்டுள்ளது என்று ஆப்பிள் CEO டீம் குக் அவர்கள் கூறியதை அடுத்து இந்த விரிவாக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற ஜூன் காலாண்டில் அமெரிக்காவில் விற்பனையாகும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தியானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்பதை மே 1ம் தேதி அன்று நடைபெற்ற ஆப்பிள் நிறுவன நிகழ்வு ஒன்றில் குக் அவர்கள் கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் விநியோக நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதற்கான வேலையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
Hindusthan Samachar / B. JANAKIRAM