Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர் , 22 மே (ஹி.ச.)
கர்நாடகாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு குடும்பத்துடன் டெம்போ வேனில் சென்ற போது தஞ்சாவூர் அருகே, செங்கிப்பட்டி என்ற பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்தும், டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேலும் இரண்டு பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பமாக வேளாங்கண்ணிக்கு சென்றவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
Hindusthan Samachar / J. Sukumar