பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் -கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பாரீஸ், 27 மே (ஹி.ச.) 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், இத்தா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்


பாரீஸ், 27 மே

(ஹி.ச.)

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், இத்தாலியின் கியுலியோ செப்பியேரி உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்லஸ் அல்காரஸ் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கியுலியோ செப்பியேரியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Hindusthan Samachar / B. JANAKIRAM