Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 14 ஜூன் (ஹி. ச)
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50 வது பிறந்தநாளுக்காக அவரின் திரையுலக அர்ப்பணிப்பை போற்றும் வகையில் வரும் ஜூலை மாதம் 19 ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஆனந்த யாழை எனும் தலைப்பில் இசைக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ராம், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, ,ஆர்.வி.உதயகுமார், ஏ.எல்.விஜய்,அஜயன் பாலா, பவா செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குனர் ராம் பேசியபோது,
முத்துக்குமார் என் வாழ்வில் ஆனந்த யாழை மீட்டவில்லை, ஒவ்வொருவர் வாழ்விலும் அவர் ஆனந்த யாழை மீட்டி தான் வருகிறார்.
இன்றுவரை எந்த படத்திற்கு பாடல்கள் எழுத போனாலும் முத்துக்குமாரை பற்றி பேசாமல் இருந்ததில்லை.அதேபோல் யுவன் சங்கர் ராஜாவுடன் பாடல் கம்போசிங்கில் இருக்கின்ற போதும் அவரை பற்றி பேசாத நாட்கள் இல்லை.
பவா செல்லதுரை பேசியபோது,
முத்துக்குமாருக்கு தான் ஒரு கவிஞரா, அல்லது பாடலாசிரியரா என்று பெரிய போராட்டம் இருந்தது..
கவிதை பாடல்கள் என இரண்டையும் இரு குதிரைகள் போல ஓட்டி வந்தார்.
இதன்பின்னர் இயக்குனர்கள் ஒவ்வொருவரும் பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் உடனான நினைவுகளையும் அவர் எழுதிய கவிதைகள் பாடல்கள் போன்றவற்றின் நினைவுகளையும் மேடையில் பகிர்ந்துக் கொண்டனர்.
அதேபோன்று யுவன் சங்கர் ராஜா உட்பட 9 இசையமைப்பாளர்கள் இந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாக குழுவினர் மேடையில் தெரிவித்தனர்
Hindusthan Samachar / Durai.J