டபிள்யுடிசி 2வது டெஸ்ட் தொடர்: இங்கிலாந்துடன் 20ம் தேதி முதல் டெஸ்ட்
லண்டன், 18 ஜூன்(ஹி.ச.) ஐசிசி 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான 2வது தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள், வரும் 20ம் தேதி மோதுகின்றன. ஐசிசி 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்காக, 9 நாடுகள் மொத்தம் 27 டெ
டபிள்யுடிசி 2வது டெஸ்ட் தொடர்: இங்கிலாந்துடன் 20ம் தேதி முதல் டெஸ்ட்


லண்டன், 18

ஜூன்(ஹி.ச.)

ஐசிசி 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான 2வது தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள், வரும் 20ம் தேதி மோதுகின்றன. ஐசிசி 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்காக, 9 நாடுகள் மொத்தம் 27 டெஸ்ட் தொடர்களில் மோதுகின்றன. இந்த சீசனுக்கான முதல் டெஸ்ட் தொடர், வங்கதேசம் – இலங்கை இடையே நேற்று துவங்கியது.

இந்நிலையில், இக்கோப்பைக்கான 2வது தொடரின் முதல் போட்டி, இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே வரும் 20ம் தேதி இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியை தொடர்ந்து, பர்மிங்காம், லண்டன் லார்ட்ஸ், மான்செஸ்டர், கென்சிங்டன் ஓவல் மைதானங்களில் அடுத்த 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது.

இந்திய அணியில், ரிஷப் பண்ட் துணை கேப்டனாக செயல்படுவார். கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவும், நட்சத்திர வீரர் விராட் கோஹ்லியும் ஓய்வு பெற்றதை அடுத்து நடக்கும் முதல் போட்டியாக இது இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இங்கிலாந்து அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையில் களமிறங்குகிறது. இப்போட்டிகளை, சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், ஜியோ சினிமா, டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார் ஆகியவற்றிலும் காணலாம்.

Hindusthan Samachar / B. JANAKIRAM