Enter your Email Address to subscribe to our newsletters
புதுக்கோட்டை , 19
ஜூன் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வசந்தகுமார்(24), சீர்காழி பேருந்து நிலையம் அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதே பகுதியில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த ராஜராஜேஸ்வரி(21) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வசந்தகுமார் தனது குடும்பத்தாரின் ஒப்புதலோடு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ராஜராஜேஸ்வரியை மாலை மாற்றி ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.
மேலும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி புகார் மனு அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / B. JANAKIRAM