ரூ.538 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் - பி.சி.சி.ஐ-க்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
மும்பை , 19 ஜூன் (ஹி.ச.) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாட்டு சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி உலகலவில் ரசிகர்களிடம் மிக
ரூ.538 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்


மும்பை , 19 ஜூன் (ஹி.ச.)

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு நாட்டு சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி உலகலவில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கிரிக்கெட் தொடராகும்.

இதற்கிடையே, கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயவர்தனே தலைமையில் ஆர்.எஸ்.டபுள்யூ என்ற நிறுவனம் ‘கொச்சி டஸ்கர்’ என்ற பெயரில் கேரள அணியை உருவாக்கியது. ஆனால், ஒப்பந்தத்தின்படி வங்கி உத்தரவாதம் அளிக்காததால், 2021 ஆம் ஆண்டு கேரள டஸ்கர்ஸ் அணியை ஐபிஎல் தொடரில் இருந்து பி.சி.சி.ஐ நீக்கியது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கையை எதிர்த்து ஆர்.எஸ்.டபுல்யூ நிறுவனம் நடுவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவில், ரூ.555 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறும் கோரியது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் கொச்சி டஸ்க்கர்ஸ் அணிக்கு ரூ.538 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அணிக்கு உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / J. Sukumar