தனது கதையை திருடி ஹிட் 3 திரைப்படம் தயாரித்துள்ளதாக ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, 21 ஜூன் (ஹி.ச.) நடிகர் நானி, ஶ்ரீ நிதி நடிப்பில் உருவான திரைப்படம் ஹிட் 3. தனது கதையை திருடி ஹிட் 3 திரைப்படம் தயாரித்துள்ளதாக விமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்ற
Nani


சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)

நடிகர் நானி, ஶ்ரீ நிதி நடிப்பில் உருவான திரைப்படம் ஹிட் 3. தனது கதையை திருடி ஹிட் 3 திரைப்படம் தயாரித்துள்ளதாக விமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால் நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஏஜென்ட் 11 என்ற பெயரில் இதே கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன் என மனுதாரர் விமல் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஹிட் 3 திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவிதிதத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார்.

ஹிட் 3 மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவிதிதத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார்

இந்த விசாரணை ஜூலை 07ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / YUVARAJ P