இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி - இந்திய வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை
லண்டன் , 21 ஜூன் (ஹி.ச.) இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய
இந்திய வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை


லண்டன் , 21 ஜூன் (ஹி.ச.)

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும் ஜெஸ்வால் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்வால் படைத்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 161 ரன்கள் குவித்த ஜெஸ்வால், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் போட்டியில் 101 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / J. Sukumar