ஆண்ட்ராய்டு போனில் கால் ரெகார்டிங் -எச்சரிக்கை இல்லாமல் எப்படி செய்வது?
சென்னை, 22 ஜூன்(ஹி.ச.) தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஒருவரை உளவு பார்ப்பது, ஒருவரின் நடவடிக்கைகளை அவருக்கே தெரியாமல் ரெக்கார்டு செய்து கொள்வதெல்லாம் சகஜமாகிவிட்டது. தொழில்நுட்பத்தை பொறுத்தவரை அதன் நன்மை தீமைகள் எல்லாம் பயன்பட
Android-ல் கால் ரெகார்டிங்: எச்சரிக்கை இல்லாமல் எப்படி செய்வது?


சென்னை, 22

ஜூன்(ஹி.ச.)

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஒருவரை உளவு பார்ப்பது, ஒருவரின் நடவடிக்கைகளை அவருக்கே தெரியாமல் ரெக்கார்டு செய்து கொள்வதெல்லாம் சகஜமாகிவிட்டது. தொழில்நுட்பத்தை பொறுத்தவரை அதன் நன்மை தீமைகள் எல்லாம் பயன்படுத்துபவர்களை பொறுத்தே விளைவுகளும் இருக்கும். அந்தவகையில் கால் ரெக்கார்டிங் வசதியிலும் நன்மை மற்றும் தீமைகள் இருக்கின்றன. நன்மை என்ன என்ற அடிப்படையில் மட்டும் யாருக்கும் தெரியாமல் கால் ரெக்கார்டிங் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

சில Android போன்களில் ரகசியமான ஒரு வசதி உள்ளது, அது உங்கள் அழைப்புகளை மற்றவருக்கு தெரியாமல் ரெகார்ட் செய்ய உதவுகிறது. இங்கே அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

இந்த கால் ரெக்கார்டிங் வசதி எதற்கு பயனுள்ளதாக இருக்கும்?

* வேலை அழைப்புகள் தொடர்பான முக்கியமான விவரங்களை நினைவில் வைக்க உதவும்.

* கஸ்டமர் சர்விஸ் பிரச்சினைகள்: வாக்குறுதிகளை நிரூபிக்க ரெகார்டிங் பயனுள்ளது.

* பாதுகாப்பு: ஆபத்தான நிலைமைகளில் சாட்சியமாக சேமிக்கலாம்.

எப்படி செட்டிங்ஸ் மாற்றுவது?

- காண்டாக்ட்ஸ் ஆப் (Contacts app) திறக்கவும்.

- மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் (⋮) அழுத்தவும்.

-Settings (அமைப்புகள்) தேர்ந்தெடுக்கவும்.

- Call Recording அல்லது Call Settings தேடவும் (உங்கள் போனின் மாடல் அடிப்படையில் வித்தியாசமாக இருக்கலாம்).

- Play Audio Tone instead of Disclaimer (அல்லது இதைப் போன்ற ஒரு விருப்பம்) தேடி அதை ஆன் செய்யவும்.

- இப்போது, கால் ரெகார்டிங் செய்யும் போது ஒரு சிறிய பீப் ஒலி மட்டும் கேட்கும், மற்றவருக்கு தெரியாமல் இருக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை : சில இடங்களில் இருவரின் சம்மதம் இன்றி கால் ரெகார்டிங் செய்வது சட்டவிரோதம். இதை மற்றவர்களை ரகசியமாக கண்காணிக்க பயன்படுத்த வேண்டாம்.

பாதுகாப்பான ரெகார்டிங் ஆப்ஸ் / முறைகளைத் தேர்ந்தெடுக்கவும். ஆபத்தான மூன்றாம் தரப்பு ஆப்ஸைத் தவிர்க்கவும். Play Store-ல் ACR Call Recorder, Cube Call Recorder போன்ற நம்பகமான ஆப்ஸ்கள் உள்ளன. ஸ்கேமி ஆப்ஸ் தரவு திருடக்கூடும், எனவே ரிவியூகளைச் சரிபார்க்கவும்.

ஆட்டோமேட் க்ளவுட் பேக்அப்: ரெகார்டிங் கோப்புகளை Google Drive, OneDrive போன்றவற்றில் சேமிக்கவும்.

கோப்புகளை பாஸ்வேர்ட் / என்க்ரிப்ஷன் செய்யவும். ZArchiver, File Manager+ போன்ற ஆப்ஸ்களில் என்க்ரிப்ட் செய்யலாம். மேலும், மற்றவர்களுடன் பகிர்வதற்கு முன், ரெகார்டிங் செய்ததை அவர்களுக்குத் தெரியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ரகசிய ரெகார்டிங் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது.

Hindusthan Samachar / B. JANAKIRAM