கால்பந்து வீரர் புளோரியனை ரூ.1351 கோடிக்கு வாங்கிய லிவர்பூல் அணி!
லண்டன், 22 ஜூன் (ஹி.ச.) ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளம் கால்பந்தாட்ட வீரர் புளோரியன் விர்ட்ஸ், கிளப் போட்டிகளில் அந்நாட்டின் பேயர் லெவர்குசென் அணிக்காக விளையாடி வந்த நிலையில், தற்போது அவரை இங்கிலாந்து பிரிமீயர் லீக் போட்டியில் அங்கம் வகிக்கும் முன்னணி க
கால்பந்து வீரர் புளோரியனை ரூ.1351 கோடிக்கு வாங்கிய லிவர்பூல் அணி


லண்டன், 22 ஜூன் (ஹி.ச.)

ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளம் கால்பந்தாட்ட வீரர் புளோரியன் விர்ட்ஸ், கிளப் போட்டிகளில் அந்நாட்டின் பேயர் லெவர்குசென் அணிக்காக விளையாடி வந்த நிலையில், தற்போது அவரை இங்கிலாந்து பிரிமீயர் லீக் போட்டியில் அங்கம் வகிக்கும் முன்னணி கிளப் அணியான லிவர்பூல் வாங்கியுள்ளது.

இது தொடர்பாக இரு கிளப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, பேயர் லெவர்குசென் கிளப்பிடம் இருந்து ரூ.1351 கோடிக்கு புளோரியனை லிவர்பூல் கிளப் அணி வாங்குவதற்கான ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை புளோரியன் பெற்றுள்ளார். அவர், பேயர் லெவர்குசென் கிளப் அணிக்காக இதுவரை 197 போட்டிகளில் விளையாடி 57 கோல்கள் அடித்துள்ளார்.

Hindusthan Samachar / J. Sukumar