Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி , 23 ஜூன் (ஹி.ச.)
குஜராத் மாநிலத்தின் இரண்டு தொகுதிகள், வங்காளம், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என 5 சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த ஜூன் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 73.26 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 70 சதவீதமாக உயர்ந்தது. கேரளா மற்றும் வங்காளத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்கள் அடுத்த ஆண்டு இரு மாநிலங்களிலும் நடைபெறும் பெரிய சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னோடியாகக் கருதப்படுகின்றன. வங்காளத்தின் காளிகஞ்சில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள இலக்கு வைத்துள்ளது, அதே நேரத்தில் கேரளாவின் நிலம்பூர் தொகுதி பிரியங்கா காந்தி வத்ராவின் வயநாடு தொகுதியின் கீழ் வருவதால் அவருக்கான கெளரவமாக பார்க்கப்படுகிறது. இதனால், அத்தொகுதியில் வெற்றி பெறுவது காங்கிரஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் உள்ள லூதியானா மேற்கு தொகுதியை தக்க வைத்துக் கொள்ளவதற்காக தேர்தலின் போது கடுமையாக போராடியது. மேலும் பாஜக தனது 18 ஆண்டுகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், குஜராத்தின் விசாவதர் தொகுதியை வெல்லும் நம்பிக்கையில் உள்ளது.
குஜராத்தில் உள்ள காடி தொகுதி, தலித் சமூகத்தின் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் இங்கு பா.ஜ.க வெற்றி பெற்று தலித் சமூகத்தினர் இடையே தங்களுக்கு செல்வாக்கு இருப்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இதை பார்க்கிறது.
Hindusthan Samachar / J. Sukumar