புதுச்சேரியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி விபத்து
புதுச்சேரி , 23 ஜூன் (ஹி.ச.) புதுச்சேரி அடுத்த ரெட்டிச்சாவடி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மார்பல்ஸ் விற்பனையகங்கள் உள்ளது, இன்று பெரிய காட்டு பாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ராஜேஷ் என்பவர் தனியார் மார்பல்ஸ் ஷோரூமில் இருந்து மார்பல்ஸை மினி லாரியில்
விபத்து


புதுச்சேரி , 23 ஜூன் (ஹி.ச.)

புதுச்சேரி அடுத்த ரெட்டிச்சாவடி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மார்பல்ஸ் விற்பனையகங்கள் உள்ளது, இன்று பெரிய காட்டு பாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ராஜேஷ் என்பவர் தனியார் மார்பல்ஸ் ஷோரூமில் இருந்து மார்பல்ஸை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்டார்,

அப்போது கரிக்கன் நகர் செல்லும் வழி பகுதியில் வரும் பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த மார்பல்ஸ் கீழே சரிந்ததால் பாரம் தாங்க முடியாமல் தடுப்பு கட்டையின் மீது மோதிய மினி லாரி அந்தரத்தில் தொங்கியது. லாரியில் இருந்த ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெட்டிச்சாவடி போலீசார் விபத்து ஏற்படுத்திய மினி லாரியை ஜேசிபி இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்டனர் மேலும் தடுப்புக்கட்டையின் மீது மோதிய மினி லாரி அந்தரத்தில் தொங்கிய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்திலும் வைரல் ஆகி வருகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / Durai.J