Enter your Email Address to subscribe to our newsletters
சண்டிகர் , 23 ஜூன் (ஹி.ச.)
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே நேற்று 45 வயதுள்ள ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்று விட்டு, பிறகு தன்னை தானே சுட்டுக் கொண்டார்.
அனைவரது சடலங்களும் ஒரு காரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தற்கொலை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மொஹாலியில் உள்ள செக்டார் 109-ஐ சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சந்தீப் சிங் ராஜ்பால், அவரது மனைவி மந்தீப் கவுர் (42) மற்றும் அவர்களது 15 வயது மகன் அபய் சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ராஜ்பால் தனது மனைவி மற்றும் மகனை டொயோட்டா ஃபார்ச்சூனரில் சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
செங்கேரா கிராமத்திற்கு அருகே வயல்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தையும், அதற்குள் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தக்கறை படிந்த உடல்களையும் விவசாயிகள் கண்டறிந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,
பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டதாக கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தேரா பாசியில் உள்ள நீலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
ரியல் எஸ்டேட் அதிபரின் மகன் அபய் சிங் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ள காவல்துறை, சம்பவம் தற்கொலை போல் தோன்றினாலும், அனைத்து கோணங்களும் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / J. Sukumar