Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு என்ற அடிப்படையில் தான் முன்னாள் அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.
அம்மாநாட்டில் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி ஒளிபரப்பப்பட்டதாக சொல்லப்படும் காணொளி குறித்து அவர்களுக்கு தெரியாது.
1999-ல் பாஜக கூட்டணியில் இருந்து மத்திய அமைச்சர்களாக இருந்த போதும், 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்த போதெல்லாம் திமுக-வுக்கு தெரியாதா? அதைப் பற்றியெல்லாம் அவர்கள் பேசுவார்களா?
2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது வைக்கப்பட்டவிமர்சனம் காரணமாக, மிகத் துணிச்சலான முடிவை எடுத்த தலைவர் எடப்பாடி பழனிசாமி என்பது எல்லோருக்கும் தெரியும்.
எங்களுடைய தலைவர்களை, முன்னோர்களைப் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
எடப்பாடி பழனிசாமி கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்.என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்
Hindusthan Samachar / YUVARAJ P