Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23
ஜூன்(ஹி.ச.)
திடீரென வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போது பயணிகள் தட்கல் டிக்கெட் மூலம் தங்களின் டிக்கெட்தாய் முன்பதிவு செய்துக் கொள்கின்றனர். இதன்படி பயணம் செய்யும் நாளுக்கு முந்தைய நாள் நாம் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது சாமானிய மக்களுக்கு மிகவும் கடினமான விஷயமாகும்.
பொதுவாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை 10 மணிக்கு புக்கிங் தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளாகவே அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்துவிடும். இதனால் சாமானிய மக்கள் தங்களுக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போகிறது. மேலும் ஏஜென்சிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
எனவே வருகிற ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய கட்டாயமாக ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அது மட்டுமின்றி ஜூலை 15ஆம் தேதியிலிருந்து தட்கல் முறையில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி-ஐ உள்ளீடு செய்து மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆதார் கணக்கை ஐஆர்சிடிசி கணக்குடன் அங்கீகரிப்பது எப்படி?
முதலில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் உங்களுடைய பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து லாகின் செய்ய வேண்டும்.
'My Account' என்ற பிரிவில் 'Authenticate User' என்பதை தேர்வு செய்ய வேண்டும்
உங்களின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும் 'Verify Details' என்பதை கிளிக் செய்யவும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்களின் மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும் அந்த ஓடிபி-ஐ திரையில் உள்ளிட வேண்டும்.
பின்னர் Submit button கிளிக் செய்து ஆதார் அமைப்பிடம் இருந்து உங்களின் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
சரிபார்ப்பு வெற்றி பெற்றால் திரையில் அதற்கான தகவல் காண்பிக்கப்படும் அல்லது MY ACCOUNT என்ற பிரிவில் Authentication status என்பதை கிளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.
ஆதார் சரிபார்ப்பு வெற்றி பெறவில்லை என்றாலும் அது திரையில் காட்டும், நீங்கள் சமர்ப்பித்த தகவல்களில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதையும் நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்து மீண்டும் சமர்ப்பிக்கவும்.
Hindusthan Samachar / B. JANAKIRAM